பாபநாசத்தில் தொழிலதிபர் ஆறுமுகம் இல்ல திருமண வரவேற்பு

பாபநாசம், ஜன.21: பாபநாசம் தொழிலதிபரும், பாபநாசம் பெனிபிட் பண்ட் லிமிடெட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரும், எல்ஐசி ஆப் இந்தியா சீப் லைப் இன்ஷீரன்ஸ் அட்வைசருமான ஆறுமுகம் இல்ல திருமண வரவேற்பு விழா பாபநாசத்தில் நடைபெற்றது. பாபநாசம் தொழிலதிபர் ஆறுமுகம்- ஆசிரியை சித்ரா மகன் பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் இயக்குநர் விக்னேஷ், சண்முகபிரபு-ஜெயாபிரபு மகள் ராஜ நந்தினி திருமண வரவேற்பு விழா பாபநாசத்தில் நடைபெற்றது. விழாவில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகன், மாவட்ட துணைச் செயலர் அய்யாராசு, பாபநாசம் ஒன்றிய பொறுப்பாளர்கள் தாமரைச்செல்வன், நாசர், கார்த்தி, பிரகாஷ், அனீபா, பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் பொறுப்பு கணேசன், செயலர் செங்குட்டுவன், பொருளாளர் செந்தில், துணைத் தலைவர் ராஜா முகம்மது, வட்டார தலைவர் சாப் ஜான், மண்டல ஒருங்கிணைப்பாளர் தம்பி முகமது இப்ராகிம், மாவட்ட தலைவர்கள் சம்பந்தம், பழனியப்பன், பாண்டியன், முத்தமிழ்ச் செல்வம், பிரபாகரன், ஆனந்த் காந்தி, நவநீதகிருஷ்ணன், உள்பட பல்வேறு கட்சியினர், ரோட்டரிச் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அனைவரையும் தொழிலதிபர் ஆறுமுகம் மகள்கள் டாக்டர் வினோதினி, விஜய ஆகியோர் வரவேற்றனர்.

Related Stories: