உளுந்தூர்பேட்டை அருகே பட்ட பகலில் இரண்டு வீடுகளில் ₹5 லட்சம் நகை, பணம் கொள்ளை

உளுந்தூர்பேட்டை, ஜன. 21:   கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தற்போது சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.  இவருடைய மனைவி கலைவாணி(25) மற்றும் உறவினர்கள் வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று காலை இதே கிராமத்தில் உள்ள வயல்வெளிக்கு சென்றுள்ளனர். மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள் அனைத்தும் திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது இரண்டு பீரோக்களை கொள்ளையர்கள் திறந்து அதில் இருந்த 8 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதேபோல் எஸ்.மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்ஐசி ஏஜெண்ட் இவரது வீட்டில் நேற்று கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் உள்ளிட்டவை கொள்ளை போனது தெரியவந்தது.   இந்த இரண்டு வீடுகளிலும் பட்ட பகலில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை போன சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவங்கள் குறித்து உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜிகுமார், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், எலவனாசூர்கோட்டை காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம், பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகி

Related Stories:

>