சென்னை : காலிப் பணியிடங்கள் உருவானால் 2 ஆண்டு பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு முன் பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் 750 செவிலியர்களுக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கித் தரப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

