சிறப்பு காவலர்கள் அறிமுக கூட்டம்

அவிநாசி, ஜன. 21:  அவிநாசி அருகே கருவலூர் மற்றும் செம்பியநல்லூர் ஊராட்சிகளில் சிறப்பு காவலர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா பங்கேற்று பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, டிபன் பாக்ஸ், பெண்களுக்கு சட்ட  விழிப்புணர்வு புத்தகங்களையும் வழங்கினார். அப்போது கருவலூர் ஊராட்சி, செம்பியநல்லூர் ஊராட்சி சிறப்புக்காவலர்கள் ஜெய்கிருஷ்ணன் மற்றும் கந்தசாமி ஆகியோரை அறிமுகப்படுத்தி, போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா பேசியதாவது: குற்றங்களை கண்டுபிடிப்பதில், ஸ்காட்லாண்ட் போலீசாரைபோல, தமிழ்நாட்டு போலீசார் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.  குற்றங்களை கண்டுபிடிப்பதிலும், தடுப்பதிலும் தமிழ்நாடு காவல்துறை பெருமளவில் முன்னேறி உள்ளது. சிறப்புக்காவலர் திட்டத்தின் மூலமாக குற்றங்களை தடுத்து வருகிறோம். இந்த சிறப்பு காவலர்களிடம் 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படும் வகையில் சிறப்பு காவலர் செயல்பட்டு, தேவையான உதவிகளை செய்வர். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், அவிநாசி போலீஸ் டி.எஸ்பி. பாஸ்கரன், அவிநாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்,  அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, கருவலூர் ஊராட்சி தலைவர் (பொறுப்பு) ஆறுமுகம், செம்பியநல்லூர் ஊராட்சி தலைவர் சுதா வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>