சிவகாசி, டிச. 22: கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் டிச.25ல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சர்ச், வீடுகள், பள்ளிகளில் இயேசுநாதரின் பிறப்பை கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் ஸ்டார்களை தொங்க விட்டு குடில்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து கிறிஸ்தவர்கள் வழிபடுவர். இதையொட்டி சிவகாசியில் மாநகரில் கிறிஸ்தவர்கள் வாங்க ஸ்டார், ட்ரீ, கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள் விற்பனை களை கட்டியுள்ளது.
இதுகுறித்து கடைக்காரர்கள் கூறியதாவது: கிறிஸ்துமஸ் ஸ்டார் ரூ.10 முதல் ரூ.1,145 வரையிலும், ட்ரீ ரூ.45 முதல் ரூ.8,950 வரையிலும், சீரியல் லைட் ரூ.75 முதல் ரூ.895 வரையிலும், சாண்டா கிளாஸ் உடை, ரூ.295 முதல் ரூ.1,695 வரையிலும், குடில் செட் ரூ.295 முதல் ரூ.4,850 வரையிலும், கிறிஸ்துமஸ் மரத்தில் தொடங்கவிடப்படும் பொருட்கள் ரூ.30 முதல் ரூ.700 வரையிலும்; தோரணங்கள் ரூ.25 முதல் விற்பனைக்கு உள்ளது. வண்ண விளக்குகளால் ஆன கிறிஸ்துமஸ் ஸ்டாரை, விரும்பி வாங்கி செல்கின்றனர் என்று கூறினார்.
