- விருதுநகர்
- விருதுநகர் மாவட்டம்
- வி.எச்.என்.எஸ்.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- விருதுநகர் KVS ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
- கிருஷ்ணன் கோவில்…
விருதுநகர், டிச.22: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற எஸ்ஐ எழுத்து தேர்வில் 4175 பேர் தேர்வு எழுதினர். விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் விஹெச்என்எஸ்என் கலை அறிவியல் கல்லூரி, விருதுநகர் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலா 1000 பேர், கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலை கழகத்தில் 2747 பேர், சாத்தூர், செவல்பட்டி பிஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் 1479 பேர் (பெண்கள்) என மொத்தம் 6226 பேர் தேர்வு எழுத இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்தத் தேர்வு மையங்களில் எஸ்பி கண்ணன் தலைமையில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 733 பேர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தேர்வில் ஆண்கள் 3279 பேர், பெண்கள் 896 பேர் என மொத்தம் 4175 பேர் தேர்வு எழுதினர். ஆண்கள் 1468 பேர், பெண்கள் 583 பேர் என மொத்தம் 2051 பேர் ஆப்செண்ட் ஆகியிருந்தனர்.
