ஆன்லைன் பண மோசடி குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்

தேனி, டிச. 22: ஆன்லைன் பண மோசடி குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை போலீசார் பொதுமக்களிடம் விநியோகித்தனர். தமிழ்நாடு முழுவதும் சமூக விரோதிகளால் ஆன்லைன் மோசடி நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் மோசடி மூலம் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக போலீசார் விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, தேனியில் நேற்று போலீசார் விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், தேநீர் கடைகள், சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கினர்.

விழிப்புணர்வு பிரசுரத்தில் பல்வேறு நிதி நிறுவனங்கள் பெயரிலும் வேறு வழிகளிலும் லாபம் கிடைக்கும் என்ற விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளனர். தனியார் ஏலச்சீட்டில் பொதுமக்கள் பணத்தை சேமிப்பதாக நினைத்து பணத்தைக் கட்டி ஏமாந்து வருகின்றனர், ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அவ்வாறு ஏமாறாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள விழிப்போடு இருக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

 

Related Stories: