ராமநாதபுரம், டிச.22: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய பாஜ அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராஜராம் பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜோதி பாலன், ஆனந்தகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஒன்றிய அரசை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
