கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம்

தேவகோட்டை, டிச.22: தேவகோட்டை மறைவட்டம் புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சாண்டா கிளாஸ் வேடமணிந்து ஊர்வலம் சென்றனர். இயேசு கிறிஸ்து பிறப்பை டிசம்பர் 25ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

அதன் முன்நிகழ்வாக கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கிறிஸ்து பிறப்பு பாடல் பாடியபடி புளியால் பங்கில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார். அனைத்து வீடுகளிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்று உபசரித்தனர். இதில் பங்கு பணியாளர் சுவாமிநாதன் மற்றும் உதவி பணியாளர் பென்சிகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: