திருவட்டார், டிச. 22: ஆற்றூர் அருகே கல்லுப்பாலம் இசக்கி அம்மன் கோயில் அரங்கத்தில் வைத்து திருவட்டார் மேற்கு ஒன்றிய பாஜக சார்பாக மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் கேஸ் இணைப்பு இல்லாத பதினைந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் வழக்கறிஞர் ரெஜூலா ஐயப்பன் திட்டத்தை தொடங்கி வைத்தார். திருவட்டார் ஒன்றிய பாஜக பொது செயலாளர் பிராங்கிளின், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அனுஷன், ஐயப்பன் உட்பட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
