அருமனை, டிச. 22: அருமனை அருகே மருதங்கோடு கலிங்கவிளை பகுதியை சேர்ந்தவர் ஆஸ்லின் பெல்மன். அவரது மனைவி மஞ்சு (27). இவர் சம்பவத்தன்று தனது அண்ணி ஈவிலின் என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது செம்மங்காலை என்ற இடத்தில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரி அருகே சென்ற போது அந்த வழியாக பைக்கில் இடைக்கோடு நைனான்விளையை சேர்ந்த ஷாஜி என்பவர் வந்தார்.
பின்னர் ஷாஜி திடீரென மஞ்சு வந்த பைக்கை வழிமறித்தார். இதையடுத்து அவர் மஞ்சுவிடம் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மஞ்சு அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் பெண்களை மிரட்டிய ஷாஜி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
