×

திண்டுக்கல்- நத்தம் ரோட்டில் குழாயில் உடைப்பால் வீணான குடிநீர்: உடனே சரிசெய்தனர்

திண்டுக்கல், டிச. 22: திண்டுக்கல்- நத்தம் ரோட்டில் நுகர்பொருள் வாணிப கழக குடோன் முன்பு திண்டுக்கல்லிருந்து இருந்து நத்தம் செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு 1 மணி நேரமாக குடிநீர் வீணாக ரோட்டில் சென்றது. இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், குழாய் வழியாக செல்லும் தண்ணீரை நிறுத்தினர்.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கூறியதாவது: திண்டுக்கல் பகுதியில் இருந்து சாணார்பட்டி, நத்தம் பகுதிகளுக்கு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் திடீர் என உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது. தற்போது தண்ணீரை நிறுத்தி குழாயினை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. பணி முடிவடைந்த பின்பு வழக்கம்போல் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.

 

Tags : Dindigul-Natham road ,Dindigul ,Cauvery ,Natham ,Consumer Goods Trading Corporation ,
× RELATED ஓய்வூதியர் தின விழா