×

வடமதுரை விபத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் பலி

வடமதுரை, டிச. 22: வடமதுரை ஆண்டிமாநகரை சேர்ந்தனர் மகாமுனி (79). ஓய்வு பெற்ற ஒன்றிய அலுவலக ஊழியர். இவர் கடந்த டிச.16ம் தேதி திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலையில் வடமதுரை மின்வாரிய அலுவலக ரோடு சந்திப்பு பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவரது டூவீலரம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகாமுனி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Tags : Vadamadurai ,Mahamuni ,Andimanagar, Vadamadurai ,Dindigul-Trichy ,Vadamadurai Electricity Board ,Office Road ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்