கன்னியாகுமரி,டிச.20: 8வது கராத்தே பெல்ட் சிறப்பு தேர்வு சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. எட்டாவது கருப்பு பட்டைகான தேர்வை மவாத்தே சிடோரியோ கராத்தே அமைப்பின் தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் கலைமணி நடத்தினார். இந்தத் தேர்வில் கே.கே.ஆர் அகாடமி நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கராத்தே ராஜ் கலந்து கொண்டு கருப்பு பட்டைக்கு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார். இதில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு சங்கத்தின் தலைவர் மாஸ்டர் ஜேக்கப், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டு கழகத்தின் பொதுச் செயலாளர் மாஸ்டர் அல்டாப் அலாம் கலந்து கொண்டனர். இந்த எட்டாவது கராத்தே பெல்ட் தேர்வில் தேர்ச்சி பெற்று கே.கே.ஆர் அகாடமியில் பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்தது உள்ளது என பெற்றோர்கள் வாழ்த்தினர்.
கராத்தே பெல்ட் சிறப்பு தேர்வில் குமரி மாணவர்கள் தேர்வு
- குமாரி
- கன்னியாகுமாரி
- கராத்தே பெல்ட் சிறப்புத் தேர்வு
- பல்லாவரம், சென்னை
- மாஸ்டர்
- கலைமணி
- மவத்தே சிடோரியோ கராத்தே அமைப்பு
- கே.கே.ஆர் அகாடமி
