25,000 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

சேலம், ஜன.20: சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழகத்தில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் நடப்பு 2020-21ம் கல்வியாண்டில், 11,082 மாணவர்களுக்கும், 14,343 மாணவிகளுக்கும் என மொத்தம் 25,425 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து அனைவருக்கும் சைக்கிள் வழங்கப்படும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>