திருச்செந்தூர் மேலத்தெரு யாதவர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 25ம் தேதி நடகிறது

திருச்செந்தூர், ஜன.20: திருச்செந்தூர் மேலத்தெரு யாதவர் சமுதாய மாரியம்மன் கோயிலில் வரும் 25ம்தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி 23ம்தேதி காலை 8.30 மணிக்கு  அனுக்ஞை, விக்னேஸ்வர் பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, லட்சுமி பூஜை, மஹா கணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமத்தை தொடர்ந்து பூர்ணாகுதி  நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி,  கும்பம் யாகசாலை புறப்பாடு, முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது.

24ம்தேதி காலை 9 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கி 2வது காலயாகசாலை பூஜை,  மாலை 6 மணி சங்கல்பம், 3வது காலயாகசாலை பூஜையை தொடர்ந்து யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்தல், தீபாராதனை நடக்கிறது.25ம்தேதி காலை 4 மணிக்கு 4ம் காலயாகசாலை பூஜையை தொடர்ந்து பூர்ணாகுதி, மஹா யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு, விமான கலசங்களுக்கு  கும்பாபிஷேகம் தொடர்ந்து அம்பாள், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. 9.05 மணிக்கு அம்பாளுக்கு மஹா அபிஷேகம், 12.05 மணிக்கு அலங்கார தீபாராதனையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி, அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், கும்பம் புறப்படுதல், ஊர் பொங்கல் விடுதல், இரவு படப்பு தீபாராதனை நடக்கிறது. 26ம்தேதி மண்டல பூஜை தொடங்கி பிப்.15ல் மண்டலாபிஷேகநிறைவு  பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை திருச்செந்தூர் மேலத்தெரு யாதவ மகாசபை தலைவர், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், திருப்பணி கும்பாபிஷேக கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: