- Thenkanikottai
- வருண் கடபால்
- இட்டெண்டர் கடபால்
- ராய்ப்பூர் மாவட்டம், சத்தீஸ்கர்
- ஈஎஸ்ஐ மெடிகல் கால
- பெங்களூர்
- சிஸ்பால் சிங்
- ராஜஸ்தான்
தேன்கனிக்கோட்டை: சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டம் இட்டன்டர் கடப்பால் மகன் வருண் கடப்பால் (22). பெங்களூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிஸ்பால்சிங் (20). இவரும், அதே கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். மாணவர்கள் இருவரும், நேற்று முன்தினம் இரவு பெங்களூருவிருந்து ஒகேனக்கல்லுக்கு புல்லட்டில் புறப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2.30 மணி அளவில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அரசு போக்குவரத்து பணிமனை அருகே வளைவில் செல்லும்போது, டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர விளம்பர பலகையில் பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் சிஸ்பால் சிங்கின் தலை துண்டானது. இதுபற்றிய தகவலின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீசார் விரைந்து சென்று பலியான 2 பேரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
