இன்று மார்கழி மாதப்பிறப்பு கடைகளில் அலைமோதிய மக்கள்

*பூக்கள் விற்பனை படுஜோர்

திருப்பத்தூர் : இன்று மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

பெண்கள் விளக்குகளை ஏற்றி வழிபாடு செய்தனர்.இன்று மார்கழி மாதப்பிறப்பை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் கோட்டை கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயில், தர்மராஜர் கோயில், வாணியம்பாடி அழகு பெருமாள் கோயில், ஆம்பூர் பெரிய ஆஞ்சநேயர் கோயில்களில் அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், திருவெம்பாவை பாராயணமும் நடந்தது.

அதேபோல் சிவன் கோயில்களிலும் அதிகாலை சிறப்பு அபிஷேகமும் நடந்தது. அனைத்து வைணவ, சைவ ஆலயங்களில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்பு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன.

அதிகாலையில் பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து வீட்டிற்கு வெளியே அகல்விளக்குள் ஏற்றி வழிபட்டனர்.மார்கழி மாத பிறப்பையொட்டி நேற்று இரவு திருப்பத்தூர் பஸ்நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட், ஜின்னாரோடு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் பூக்கள் மற்றும் பூஜை பொருட்களை வாங்க திரண்டனர்.

Related Stories: