வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

சங்கராபுரம், ஜன. 19: சங்கராபுரம் அடுத்த சவுந்தரவள்ளிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பிள்ளை மகன் பிரசாந்த்(21). முனுசாமி மகன் அசோக்(21) ஆகியோர் குடிபோதையில் அங்கு சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த ஊராங்கணி கிராமத்தை சேர்ந்த முத்து மகன் அஜித், மாரி மகன்கள் அருள்மணி, அன்புமணி ஆகியோரை தரக்குறைவாக பேசி தாக்கி  கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து, அஜித்தின் அண்ணன் அய்யனார் சங்கராபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் திருமால் வழக்கு பதிவு செய்து பிரசாந்த் மற்றும் அசோக் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories:

>