×

பர்கூரில் விவசாய நிலத்திற்குள் புகுந்து மக்காச்சோள பயிர்களை நாசம் செய்த ஒற்றை காட்டு யானை

*போராடி விரட்டிய மலைவாழ் மக்கள்

அந்தியூர் : பர்கூர் மலைப்பகுதியில் விவசாய நிலத்துக்குள் புகுந்து மக்காச்சோளம் பயிர்களை நாசம் செய்த ஒற்றை காட்டு யானையை மலைவாழ் மக்கள் விடிய, விடிய போராடி விரட்டினர்.ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் கர்நாடக எல்லையோர கிராமமான குட்டையூர் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை அங்குள்ள விவசாய நிலத்துக்குள் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம் மற்றும் ராகி பயிர்களை சாப்பிட்டும் காலால் மிதித்து சேதப்படுத்தியது.

இதனைக் கண்ட அப்பகுதி மலைவாழ்மக்கள் சத்தம் போட்டும், டார்ச் லைட் அடித்தும், பட்டாசுகளை வெடித்து விடிய விடிய விரட்டி அடித்தனர். மேலும், அருகே உள்ள கிராமங்களான வேலம்பட்டி மற்றும் மட்டி மரத்தல்லி கிராமங்களிலும் இந்த யானை அட்டகாசம் செய்து வருகிறது.

தட்டக்கரை வனத்துறையினர் அங்கிருந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டாலும் யானை ஊருக்குள் வருவதை தடுக்க முடியவில்லை. எனவே, வனப்பகுதியோர கிராமத்திற்குள் யானை புகாத வண்ணம் அகழி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bargur ,Anthiyur ,Erode district… ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...