×

உதகை சுற்றுவட்டார பகுதிகளில் காணப்படும் உறைபனி: தலைகுந்தா பகுதியில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு

உதகை: உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாத காலங்கள் குளிர்கால சீசன் காலமாககும், அந்த மூன்று மாதங்களும் அதிகாலை நேரங்களில் வெப்பநிலை குறைவதின் காரணமாக, கூரைகள், வீடுகள், வாகனங்கள், புல்வெளிகள் என அனைத்து வெளிப்பகுதிகளிலும் நீர்த்துளிகள் உறைவதால் உறைபனி தாக்கம் இருக்கும். கடும் குளிரும் நிலவுவதால் பொதுமக்கள் இயல்பு வழக்கை என்பது கடுமையாக பாதிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு தொடர்மழை மற்றும் புயல் காரணமாக சற்று தாமதாக தொடங்கியிருக்கிறது. நேற்றைய தினம் முதல் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி தாக்கம் என்பது காணப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக பனியின் தாக்கம் என்பது அதிகமாக இருக்கிறது. குறிப்பாக வெப்பநிலை 0 டிகிரியை எட்டியிருக்கிறது தலைகுந்தா பகுதியில் புல்வெளிகள் மற்றும் வீடுகள் அங்கு நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள் மீது உறைபனி என்பது படிந்து காணப்படுகிறது. அதிகாலை நேரங்களில் இதனை பார்ப்பதற்கு குட்டி காஸ்மீர் போல காட்சி அளிக்கிறது.

கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.அதனால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கும் நிலை ஏற்பட்ட நிலையில் அந்த தலைகுந்தா பகுதியில் அதிகளவில் உறைபனி காணப்பட்டதால் அந்த வழியாக வந்த சில சுற்றுலா பயணிகள் அதனை கண்டு வியந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த பனியை எடுத்து விளையாடியும் அதைபோல் புகைப்படம் எடுத்தும் மிகிழ்ந்து இருக்கிறார்கள். இனி வரும் நாட்கள் இந்த பனியின் தாக்கம் என்பது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Iapai ,Thakunda ,Uthaka ,Kingdom of the Mountains ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...