×

ரிஷபேஸ்வரர் கோயில் கும்பாபிஷேம் நகர மன்ற உறுப்பினர் ரூ.1 லட்சம் நன்கொடை செங்கம் நகரில் ஜனவரி 28ம் தேதி

செங்கம், டிச. 12: செங்கம் நகரில் 1600 ஆண்டுகள் பழமையான ரிஷபேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 28ம் தேதி நடக்கிறது. செங்கம் நகரில் 1600 ஆண்டுகள் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் கட்டிய காலம் முதல் குடமுழுக்கு நடைபெறாமல் இருந்தது. இதனால் தமிழக அரசு சார்பில் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், ஊர் நகர முக்கிய பிரமுகர்கள் மற்றும் விழாக்குழுவினர் உபயதாரர் சார்பில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று தற்போது நிறைவுற்றது. இந்நிலையில் வரும் ஜனவரி 28ம் தேதி குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதையொட்டி கோயில் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர திமுக செயலாளரும் அறங்காவலர் குழு தலைவருமான அன்பழகன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பாவப்பிரசாத் மாநில தலைவர் பாண்டுரங்கன், தொழிலதிபர் வெங்கடேஸ்வரா பாபு முன்னிலை வகித்தனர். அறங்காவலர் ஸ்ரீதர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருப்பணி குழு தலைவர் கஜேந்திரன் கலந்துகொண்டு பேசினார். வரும் 28ம் தேதி ஜனவரி மாதம் ரிஷபேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா, யாகசால பூஜை, அன்னதானம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போக்குவரத்து குறித்தும் நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக நகர மன்ற உறுப்பினர் முல்லை சத்யா குடமுழுக்கு விழாவுக்காக ரூ,1 லட்சம் நன்கொடை வழங்கினார்.

Tags : Rishabeswarar Temple ,Kumbabhishekam City Council ,Chengam Nagar ,Chengam ,Kumbabhishekam ,Rishabeswarar ,Temple ,Anupambigai Sametha Rishabeswarar Temple ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...