நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை: ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே

டெல்லி: நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என மக்களவை திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் எம்.பி. டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு ராம்தாஸ் அதவாலே பதில் தெரிவித்துள்ளார். மக்களவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸை திமுக வழங்கியது. பின்னர் மக்களவை கேள்வி நேரத்தில் திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் எம்.பி. டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அதவாலே பதில் தெரிவித்தார். அதில், 2018 முதல் 2025 வரை நியமிக்கப்பட்ட 841 நீதிபதிகளில் 3.8 சதவீதம் பேர் மட்டுமே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை. 2018 முதல் 2025 ஆம் ஆண்டு வரை நடந்த நீதிபதிகள் நியமனத்தில் பொதுப் பிரிவினர் மட்டும் 76.45% பேர். 7 ஆண்டுகளில், எஸ்.சி பிரிவில் 32 பேர், எஸ்டி பிரிவில் 17, ஓபிசி பிரிவினர் 103 பேர் மட்டுமே நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: