×

எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடும் நீங்கள், எல்லா மாநிலங்களையும் ஒன்றாக கருத வேண்டும்: நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா பேச்சு

சென்னை: இந்திய விடுதலைக்காக முதல் முதலில் குரல் கொடுத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பூலித்தேவன் என நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா பேசிவருகிறார். ராணி லட்சுமிபாயை பற்றி பேசுகிறார்கள், அனால் ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கை வெடிவைத்து தகர்த்த குயிலியை தெரியாது. தமிழ்நாட்டில் நேதாஜி சாலை, திலகர் சாலை, கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை உள்ளது. வட மாநிலங்களில் எங்காவது வ.உ.சிதம்பரனார் பெயர் எதற்காவது சுட்டப்பட்டுள்ளதா? என வந்தே மாதரம் பாடல் மீதான சிறப்பு விவாதத்தின் போது திருச்சி சிவா கேள்வியெழுப்பினார்.

வந்தே மாதரம் பாடல் மீதான சிறப்பு விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய திமுக எம்.பி. பேசினார்.

அப்போது: மாநிலக் கட்சியான திமுக எந்த நிலையிலும் நாட்டுக்காக போராடியவர்களை கைவிட்டதில்லை. வரிகொடா இயக்கத்திற்கு முன்பே வரி கொடுக்க மறுத்த கட்டபொம்மனை வட மாநிலங்களுக்கு தெரியுமா..? இந்திய விடுதலைக்காக முதல் முதலில் குரல் கொடுத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பூலித்தேவன். ராணி லட்சுமிபாயை பற்றி பேசுகிறார்கள், ஆனால் ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கை வெடிவைத்து தகர்த்த குயிலியை தெரியாது. ராணி லட்சுமிபாயை பற்றி பேசுகிறார்கள், ஆனால் வேலு நாச்சியாரைப் பற்றி தெரியாது.

தேசிய கீதத்துக்கும் வந்தே மாதரத்துக்கும் சம அந்தஸ்து உண்டு என அரசியலமைப்பு நிர்ணய சபை ஏற்றுக்கொண்டது. தமிழ்நாட்டில் நேதாஜி சாலை, திலகர் சாலை, கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை உள்ளது. வட மாநிலங்களில் எங்காவது வ.உ.சிதம்பரனார் பெயர் எதற்காவது சூட்டப்பட்டுள்ளதா? ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தை முதலில் மொழிந்தவர், நேதாஜிக்கு முன்னவர் செண்பகராமன் பற்றி ஏன் யாருக்கும் தெரியவில்லை? சுதந்திர இந்தியாவின் போர்க் கப்பலில் தான் நான் இந்தியா செல்ல வேண்டும் என்று கூறியவர் செண்பகராமன்.

பத்மாசினி போராட்டம் பற்றி இங்கே யாருக்குத் தெரியும்; ஒன்றிய அமைச்சர் முருகனுக்கு தெரியுமா? வடமாநிலங்களில் யாருக்காவது வீரபாண்டிய கட்டபொம்மன் பெயர் தெரியுமா? 1945ல் நாடு முழுவதும் எழுந்த வெள்ளையனே வெளியேறு முழக்கத்துக்கு முன்னோடியாக அம்முழக்கத்தை எழுப்பியவர் பூலித்தேவன்.

வந்தே மாதரம் பற்றி பேச வேண்டிய ஆளும்கட்சியினர் காங்கிரஸ் மீதும், நேரு மீதும்தான் விமர்சனம் வைக்கின்றனர். எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடும் நீங்கள், எல்லா மாநிலங்களையும் ஒன்றாக கருத வேண்டும். ஜெய்ஹிந்த் செண்பகராமனின் பெயரை அடுத்த போர்க்கப்பலுக்கு சூட்டுங்கள், பாராட்டுகிறோம் என நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா பேசினார்.

Tags : Trichy Siva ,Chennai ,India ,Poolithevan ,Tamil Nadu ,Rani Lakshmibai ,Kuili ,Netaji Salai ,
× RELATED கிரிப்டோகரன்சி மூலம் பதுக்கிய ரூ.4,189...