டெல்லி: ஒன்றிய அரசின் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து சர்ச்சை கருத்துக்கு என்.சி.இ.ஆர்.டி பகிரங்க மன்னிப்பு கோரியது. 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பகுதியை திரும்பப்பெறுவதாக என்.சி.இ.ஆர்.டி அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பகுதி சேர்க்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
