அனுமனுக்கு 5008 வடை மாலை

திருப்புத்தூர், ஜன.13: திருப்புத்தூர் வீரஆஞ்சநேயர் கோயிலில் நேற்று அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.  

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருப்புத்தூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள மேலக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோயிலில் நேற்று காலையில் ஆஞ்சநேயருக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் வீர ஆஞ்சநேயர் சுவாமி சிறப்பு பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் வந்து சுவாமிக்கு துளசி மாலை அணிவித்தும், அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா குழுவினர் செய்திருந்தனர். இதேபோல் காரைக்குடியில் உள்ள அனுமன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Related Stories:

>