தமிழகத்தில் மாற்றம் வர உங்கள் விரலை பயன்படுத்தும் நேரம் வந்து விட்டது

தாராபுரம், ஜன.13:  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகே நடந்த பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: இங்கு கூடி நிற்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது மக்கள் நீதி மய்யத்தின் மீதான நம்பிக்கையை  காட்டுகிறது. இது ஒரு மாற்றத்திற்கான கூட்டம் என்று சொல்ல வேண்டும். ஊழல் நிறைந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் மக்கள் நீதி மய்யத்திடம் உள்ளது. தாராபுரம் பகுதியில் மின் உற்பத்தி மற்றும் காற்றாலை தொழில் ஊக்குவிக்கப்படும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரப்படும். தாராபுரத்தில் விளைந்த செங் கரும்பை கொள்முதல் செய்யாமல் பூசணம் பிடித்த நோஞ்சான் கரும்புகளை வழங்கி உள்ளனர். தமிழகத்தில் மாற்றம் வர உங்கள் விரல்களை பயன்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக,  தாராபுரம் வந்த கமல்ஹாசனுக்கு தாராபுரம் அண்ணா சிலை அருகே நகர ஒன்றிய மக்கள் நீதி மய்யம் திருப்பூர் தென் கிழக்கு மாவட்டம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், திருப்பூர் தென் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எம்.எஸ்.ராஜா முகமது, மாவட்ட துணைச்செயலாளர் கோனேரிப்பட்டி பாலசுப்பிரமணியன், தெற்கு மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் முருகானந்தம், துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன், கொள்கை பரப்பு செயலாளர் குமரவேல், வடக்கு-கிழக்கு அமைப்பின் பொதுச்செயலாளர் ஏஜி மவுரியா, மாநில சார்பு அணி உமாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Related Stories:

>