டெல்லி: இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அனுவகுப்புடன் கூடிய சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு நாள் அரசுமுறை பயணமாக தனி விமானம் மூலம் இந்தியா வந்தடைந்த புதினை, பிரதமர் மோடி நேரில் சென்று உற்சாகத்துடன் வரவேற்றார். அதிபர் புதினுக்கு நேற்றிரவு அவர் சிறப்பு விருந்து அளித்தார். அப்போது இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு டெல்லி ஐடிசி மவுரியா ஓட்டலில் அதிபர் புதின் நேற்றிரவு தங்கினார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை ரஷ்ய அதிபர் புடினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.புடினுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். இதன்பிறகு மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் புதின் அஞ்சலி செலுத்தினார். இதன் பிறகு டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அதிபர் புதினும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது பாதுகாப்பு, அணு சக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம், விண்வெளி உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இரு நாடுகள் இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை – விளாடிவோஸ்டாக் தடம்:
இந்தியாவின் சென்னை மற்றும் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரங்களுக்கு இடையே புதிய கடல் வழித்தடத்தை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதேபோல ஈரானின் சபஹார் துறைமுகம் வழியிலான வடக்கு – தெற்கு வழித்தடத்தை (ஐஎன்எஸ்சிடி) உருவாக்குவது தொடர்பாகவும் பிரதமர் மோடி, அதிபர் புதின் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்பேசுகையில்,
சென்னை – விளாடிவோஸ்டாக் தடம், ஐஎன்எஸ்சிடி வழித்தடம், சுகோய் எஸ்யு 57 போர் விமானம் ஆகியவை குறித்து பிரதமர் மோடி, அதிபர் புதின் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார்கள். உக்ரைன் போர் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என்று தெரிவித்தார்.
