சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1003 கோடியில் நிறுவப்பட்ட பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் ஆலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். கண்ணாடி தொழிற்சாலையை திறந்து வைத்து தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் பணி ஆணையையும் வழங்கினார்.
பின்னர், கண்ணாடி ஆலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில்;
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முதலமைச்சர் வேண்டுகோள்
புதிய ஆலை மூலம் 840 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை பிக்டெக் நிறுவனம் உருவாக்க வேண்டும். 1000க்கும் அதிகமான திட்டங்களை போட்டு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகள் வர வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 41 சதவீதமாகும். தொழிற்சாலையில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உயர் பதவிகளை வழங்க வேண்டும்.
தமிழ்நாடுதான் எலக்ட்ரானிக்ஸ் கேபிடல்
தமிழ்நாடுதான் எலக்ட்ரானிக்ஸ் கேபிடல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக இருப்பதற்கு பிக்டெக் நிறுவனம் சாட்சியாக உள்ளது. உலக அளவில் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் உற்பத்தியில் முக்கிய மையமாக தமிழ்நாடு இருக்க உற்பத்தி திட்டத்தை உருவாக்கியுள்ளோம். தொழில் தொடங்க உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளதால் முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள்.
