வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியப் பொருளாதாரம், பணவீக்கம் உள்ளிட்ட விஷயங்களைக் கருத்தில் கொண்டு ரெப்போ விகிதத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்கும். கடந்த 3 நாட்களாக ரிசர்வ் வங்கி இது தொடர்பாக ஆலோசித்த நிலையில், இன்று ரெப்போ விகிதம் குறித்து தனது முடிவை அறிவித்துள்ளது.

அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 5.5%ல் இருந்து 5.25%ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் நாம் வாங்கும் கடன்களுக்குச் செலுத்தும் இஎம்ஐ என்பது ரெப்போ வட்டி விகிதத்தைப் பொறுத்தே இருக்கும். இந்த ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி தான் கட்டப்படுத்தும். பொருளாதாரம், பணவீக்கம் உள்ளிட்ட விஷயங்களைக் கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றி அமைக்கும்.

ரெப்போ வட்டி விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கான வட்டியாகும். இந்த வட்டி அதிகமாகும்போது வங்கிகள் நமக்குத் தரும் கடன்களின் வட்டியும் உயரும். இதனால் இஎம்ஐ அதிகரிக்கும். இந்த வட்டி விகிதம் குறையும்போது வங்கிகள் நமக்குத் தரும் கடன்களின் வட்டியும் குறையும். இதனால் இஎம்ஐ குறையும்.

அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்யக் கடந்த டிசம்பர் 3ம் தேதி முதல் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்துள்ளனர். இது தொடர்பாக இன்றைய தினம் ரிசர்வ் வங்கி தனது முடிவை அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இது குறித்த முடிவைக் காலை 10 மணியளவில் அறிவித்தார்.

இந்நிலையில் வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைந்துள்ளது. 0.25 சதவீதம் குறைக்கப்பட்டதை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமானது. வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் 4வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: