மதுபாட்டில்களை பதுக்கிய வாலிபர் கைது

உடன்குடி, ஜன.13: உடன்குடியில் மது பாட்டில்களை பதுக்கிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். உடன்குடி பஜார், பஸ்நிலையம், காட்டுப்பகுதிகளில் மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குலசேகரன்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் அமலோற்பவத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடன்குடி பஸ் நிலைய பின்புறம் போலீசாரைக் கண்டதும் ஓட்டம் பிடித்த வாலிபரை பிடித்து விசாரிக்கும் போது அவர் உடன்குடி சோமநாதபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் மாரியப்பன்(29) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>