5 ஊராட்சிகளுக்கு எல்இடி விளக்குகள்

சூளகிரி, ஜன.12: சூளகிரி தாலுகாவில் உள்ள பங்கனஹள்ளி, தியாகரசனப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, துப்புகானப்பள்ளி, சூளகிரி ஊராட்சிகளுக்கு மாவட்ட ஊராட்சிக்குழு நிதியில் இருந்து ₹5 லட்சம் மதிப்பிலான எல்இடி விளக்குகள் வாங்கப்பட்டுள்ளது.  இதனை மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ஷேக்ரஷீத் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாகிருஷ்ணன், சுதா வேனு, கலைச்செல்விராமன், மாரிமுத்து கங்கப்பா, நிர்வாகிகள் ஜமில் ராமச்சந்திரன், ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>