வேதாரண்யம், டிச. 3: வேதாரண்யம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் நந்தகுமார்ஆய்வு செய்தார்இந்த ஆய்வின் போது நகர கூட்டுறவு வங்கி செயலாளர் மணிகண்டனிடம், வங்கி செயல்பாடுகள், பெட்டக வசதி, வங்கியில் மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது மண்டல இணை பதிவாளர் பாத்திமா சுல்தானா, அலுவலக கண்காணிப்பாளர் கந்தவேல், கூட்டுறவு ஒன்றிய பணியாளர் சேகர், வங்கி பணியாளர்கள் ரெத்தினவேல், மகாராஜன், கண்ணன் உடன் இருந்தனர்விரைவில் வேதாரண்யம் நகர கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நவீன வசதியும், கணினி வசதியும் செய்து தரப்படும். மேலும், மாநில அளவில் அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் விரைவில் யூசிஐ வசதி அமுல்படுத்தபடும் என கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் நந்தகுமார் தெரிவித்தார்
