கார்த்திகை விளக்கு விற்பனை ஜோர்

 

திருப்புத்தூர், டிச.3: கார்த்திகையை முன்னிட்டு திருப்புத்தூர் காந்தி சிலை அருகில் மற்றும் அனுமார் கோவில் சந்து, மதுரை ரோடு, அண்ணா சிலை, நான்கு ரோடு உள்ளிட்ட பல இடங்களில் மண்களால் செய்யப்பட்ட பலவிதமான கார்த்திகை தீப விளக்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று கார்த்திகை திருநாளை முன்னிட்டு நேற்று பெண்கள் ஆர்வமுடன் விளக்குகளை வாங்கி சென்றனர். உயரம் மற்றும் செய்யப்பட்ட விதத்திற்கு தகுந்தார்போல் விலைகள் வைத்து வியாபாரிகள் கார்த்திகை விளக்குகளை விற்பனை செய்தனர்.

Related Stories: