சிவகாசி, டிச. 3: சிவகாசி அருகே திருத்தங்கல் சுக்கிரவார்பட்டி ரோட்டில் திருத்தங்கல் எஸ்ஐ பாண்டியராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் கருப்பசாமி (48) என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு பட்டாசுகளை தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் மற்றும் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கருப்பசாமியை கைது செய்தனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட கருப்பசாமியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் பட்டாசுகளின் மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகின்றது.
