உலக நன்மைக்காக தீபமேற்றி வழிபாடு

உடன்குடி, டிச. 3: திருச்செந்தூர், உடன்குடி ஒன்றிய பகுதிகளில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. நோய்கள், திருமண தடங்கல், கஷ்டங்கள் நீங்கவும், வீடுகள் சுபிட்சமாக இருக்கவும், நாட்டின் நன்மை, உலக நன்மைக்காகவும் சிவில்விளைபுதூர், தைக்காவூர், அம்மன்புரம், சீர்காட்சி, பிச்சிவிளைபுதூர், வட்டன்விளை, குடியிருப்பு விளை, மேலப்பள்ளிப்பத்து, செந்தாமரைவிளை, தேரிக்குடியிருப்பு, அத்தியடித்தட்டு ஆகிய கிராமங்களில் தீபமேற்றி கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டது. இதில் பொறுப்பாளர்கள் முருகேஸ்வரி, சாரதா, சித்ரா, ராஜேஸ்வரி, செல்வமணி, சக்திகனி, அமிர்தகனி, கலையரசி, சுகிதா, நளினி, நந்தினி, தேவி, ஜெயச்செல்வி, ரமாதேவி, பத்ரசித்தா, இசக்கியம்மாள், அனுசுயா, சரண்யா, செல்வக்கனி, பூமாரி, பொன்பாரதி, தங்கபுஷ்பம், அன்னக்கிளி, பார்வதி, தேன்மொழி, சாந்தி உள்பட பொறுப்பாளர்கள், ஜெய்சிங், ராஜகுமார், கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: