லக்னோவில் பெருந்திரளணி முகாமில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணியில் சாரணியர்கள்

 

திருத்துறைப்பூண்டி, டிச. 2: பாரத சாரண சாரணியர் இயக்கம் தேசிய தலைமையகத்தின் சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வரும் 19வது பெருந்திரளணி முகாம் நடைபெற்றுவருகிறது. இதில் எடமேலையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகாஷ், திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அபினேஷ், எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி ரவீராஜ், மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி சரண் ஆகியோர் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முகாமினை மாவட்ட முதன்மை ஆணையர் ராஜேஸ்வரி பாராட்டினார். மாவட்ட சாரணிய ஆணையர் மீனாட்சி, மாவட்ட செயலாளர் சக்கரபாணி, மாவட்ட பயிற்சிக்குழு உறுப்பினர் கணேசன், மாவட்ட அமைப்பு ஆணையர்கள் சாரணர் பிரிவு செந்தில்குமார், சாரண்ய பிரிவு லதா, திரிசாரணர் படை தலைவர்கள் ரமேஷ், பழனிவேல், ரமேஷ்குமார் கலந்துகொண்டனர்.

Related Stories: