ஒரத்தநாடு, டிச. 2: ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கு நத்தம் பருத்திக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக போடப்பட்ட சாலைகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நெடுஞ்சாலைத்துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட வடக்கு நத்தம் , பருத்திக்கோட்டை வாண்டையார் இருப்பு, சிவ விடுதி குலந்திரான்பட்டு ஆகிய இடங்களில் புதிய சாலை போடும் பணி நடைபெற்றது. ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இச்சாலை பணிகள் போடப்பட்டு உள்ளது.இந்நிலையில் புதிதாக போடப்பட்டு பொதுமக்களின் வாகன போக்குவரத்து பயன்பாட்டுக்கு வந்த இந்த சாலைகளின் தரம் குறித்து தஞ்சை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தரக்கட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் ரேணுகோபால் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.
