புதுடெல்லி: உதான் திட்டத்தில் செயல்படும் 15 விமான நிலையங்களில் குறைந்த பயணிகள் எண்ணிக்கை உட்பட பல்வேறு காரணங்களால் தற்போது தற்காலிகமாக செயல்படவில்லை என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
உதான் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு சார்பில் 15 ஹெலிகாப்டர் நிலையங்கள் மற்றும் 2 நீர் விமான நிலையங்கள் உட்பட 93 விமான நிலையங்களை இணைக்கும் 651 வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு வந்தன. இதில் பதன்கோட், பாக்யோங், குஷிநகர், அலிகார், அசாம்கர், சித்ரகூட், ஷ்ரவஸ்தி, மொராதாபாத், பாவ்நகர், அம்பிகாபூர், ரூர்கேலா, லூதியானா, டாடியா, கலபுரகி, சிம்லா ஆகிய 15 விமான நிலையங்கள் தற்காலிகமாக செயல்படவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மொஹோல் நேற்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
