437 கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை

தூத்துக்குடி, டிச. 2: தூத்துக்குடியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கலைஞரின் கனவு இல்லம், தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 437 கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டு அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 21 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர் லோகநாயகி என்பவருக்கு ஆட்டோவிற்கான மானியத்தொகை ரூ.1 லட்சத்திற்கான காசோலை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் மறைந்த அரசு ஊழியர்களின் 3 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் சமூக நீதி விடுதியில் சமையலர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணை, 5 பயனாளிகளுக்கு தலா ரூ.5,479 என மொத்தம் ரூ.27,395 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களையும் மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி ஆர்டிஓ பிரபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆனந்த் பிரகாஷ் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: