மலைத் தேனீக்கள் அழிப்பு

திருமங்கலம், ஜன.12: திருமங்கலம் அடுத்துள்ள கீழஉரப்பனூரில் மெயின்ரோட்டில் வேப்பமரத்தில் கூட்டமாக இருந்த மலைத்தேனிகள் அந்த வழியாக செல்வோரை கடந்த சில தினங்களாக கடித்து வந்தன. இது குறித்து நேற்று கீழஉரப்பனூர் பொதுமக்கள் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அதிகாரி ஜெயராணி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் 45 நிமிடங்கள் போராடி மரத்தில் இருந்த மலைத்தேனிக்களை தீயிட்டு அழித்தனர்.

Related Stories: