சட்டீஸ்கரில் 37 நக்சல்கள் சரண்

 

தண்டேவாடா: சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் நேற்று 37 நக்சல்கள் சரண் அடைந்தனர். இவர்களில் 27 நக்சல்களின் தலைக்கு மொத்தம் ரூ.65லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அரசின் மறுவாழ்வு முதல் சமூக மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக 12 பெண் நக்சல்கள் உட்பட 37 பேர் மூத்த சிஆர்பிஎப் அதிகாரியின் முன் சரண் அடைந்தனர். அரசின் மறுவாழ்வு கொள்கையின் கீழ் சரணடைந்த வீரர்களுக்கு தலா ரூ.50ஆயிரம் உடனடி நிதி உதவியாக வழங்கப்பட்டது. மேலும் திறன் மேம்பாடு, விவசாய நிலம் போன்ற பிற வசதிகளும் சரண் அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில் கடந்த 20 மாதங்களில் 508 நக்சல்கள் சரண் அடைந்துள்ளனர்.

 

Related Stories: