கர்ப்பிணியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு தர்ம அடி

திருப்பூர், ஜன.12: திருப்பூர் எஸ்.வி.காலனி டி.எஸ்.ஆர். லே-அவுட் 5வது வீதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கர்ப்பிணி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதேபகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் குடிபோதையில் அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக தெரிகிறது. இதனால், அப்பெண் பயத்தில் சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். சம்பவம் அறிந்து அங்கு வந்த வாலிபரின் பெற்றோரும் அவரை அடித்து உதைத்து வீட்டுக்கு அழைத்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>