×

“தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி உயர்வானது, தமிழ் இந்தியாவின் பெருமிதம்” – தமிழ் மொழியில் பேசிய பிரதமர்!

டெல்லி: தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி உயர்வானது, தமிழ் இந்தியாவின் பெருமிதம் என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழில் பேசினார். மேலும் ‘காசி தமிழ் சங்கமம் டிச.,2ல் காசி நமோ படித்துறையில் தொடங்குகிறது. இந்தாண்டுக்கான கருப்பொருளாக, ‘தமிழ் கற்கலாம்’ என்ற மிகவும் சுவாரஸ்யமான தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வரும் நமது சகோதர, சகோதரிகளை மகிழ்வோடு வரவேற்கிறேன். இந்த நிகழ்ச்சி, பல தரப்பினரையும் சந்திக்க ஒரு வாய்ப்பாக அமையும். இந்நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். காசி தமிழ் சங்கமம் என்பது, தமிழ் மொழியை விரும்பும் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது’ எனவும் பிரதமர் பேசினார்.

Tags : INDIA ,Delhi ,Modi ,Mani Ki ,Kashi Tamil Sangamam ,Kashi Namo ,
× RELATED முதல்வர் ரங்கசாமி, பாஜ அமைச்சர்...