டெல்லி கார் குண்டுவெடிப்பு 3 தீவிரவாத டாக்டர்களுக்கு 10 நாள் நீதிமன்ற காவல்

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பில் 15 பேர் பலியாகினர். இதில் தற்கொலை படையாக வந்த காஷ்மீர் டாக்டர் உமர் நபி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தான்.  இதுதொடர்பாக காஷ்மீரை சேர்ந்த டாக்டர்கள் முசம்மில் கனேயி, அடீல் ராதர், உபி பெண் டாக்டர் ஷாஹீனா சயீத் மற்றும் காஷ்மீரை சேர்ந்த மத போதகர் மவுல்வி இர்பான் அகமது வாகே உள்ளிட்ட 7 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது.

இந்நிலையில், முசம்மில், அடீல், ஷாஹீனா மற்றும் மவுல்வி இர்பான் அகமது வாகே ஆகிய 4 பேரின் காவல் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து டெல்லி முதன்மை மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 10 நாள் சிறையில் அடைக்க நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்தனா உத்தரவிட்டார்.

ரூ.18 லட்சம் சிக்கியது: டெல்லி குண்டுவெடிப்புடன் தொடர்புடைய டாக்டர்கள் தங்கியிருந்த அரியானாவின் அல் பலா பல்கலைக்கழகத்தில் என்ஐஏ நடத்திய சோதனையில் பெண் டாக்டர் ஷாஹீனா தங்கியிருந்த அறை எண் 22ல் இருந்து ரூ.18 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ நேற்று தெரிவித்துள்ளது.

Related Stories: