பழநி தெற்கு கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் நந்தவனம் : கோயில் நிர்வாகம் நடவடிக்கை

பழநி, நவ.29: பழநி தெற்கு கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் நந்தவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கிரிவீதிக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் செல்போன் பாதுகாப்பு மையம், காலணி பாதுகாப்பு மையம் , பக்தர்கள் ஓய்வு மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி தெற்கு கிரிவீதீ பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் நந்தவனம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக செம்மண் கொட்டி, தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்டுள்ளன விரைவில் செடிகள் மற்றும் விதைகள் நடப்பட உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: