பட்டுக்கோட்டையில் பெரியார் உலகத்திற்கு ரூ.17 லட்சம் காசோலை

பட்டுக்கோட்டை, நவ.29: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் வீரையன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், பட்டுக்கோட்டை நகரத் தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிதம்பரம் வரவேற்றார்.

பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில் குமார், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சூரப்பள்ளம் விஜயகுமார், சிபிஐ மாவட்ட செயலாளர் சக்திவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அரவிந்தகுமார் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூபாய் 17 லட்சத்திற்கான காசோலையை மாவட்டத் தலைவர் வீரையன் தலைமையில், திராவிடர் கழகத்தினர் அக்கட்சியின் தலைவர் கி.வீரமணியிடம் வழங்கினர்.

 

Related Stories: