வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உடல்நிலை கவலைக்கிடம்

டாக்கா: வங்கதேச மறைந்த அதிபர் ஜியா உர் ரஹ்மானின் மனைவியும் தேசியவாத கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா (80). இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஞாயிறன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு இதயம் மற்றும் நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது உடல்நிலை கவலைக்கிடமானதாக தெரிகிறது. இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் மிர்சா பக்ருல் இஸ்லாம் ஆலம்கிர் கூறுகையில், ‘‘ கலீதா மிகவும் கவலைக்கிடமாக உள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories: