தொழிலாளர் நலச்சட்டங்களை கண்டித்து தென்காசியில் தொமுச ஆர்ப்பாட்டம்

தென்காசி, நவ.29: தென்காசியில் ஒன்றியஅரசு நிறைவேற்றியுள்ள தொழிலாளர்கள் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தொ.மு.ச. பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பேரவை சார்பில் நுகர்வோர் வாணிப கழக மண்டல செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். தொமுச செயலாளர் திவான் ஒலி, தென்காசி மாவட்ட கவுன்சில் செயலாளர் மைக்கேல் நெல்சன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தொமுச பேரவை அமைப்பு செயலாளர் தர்மன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தொமுச மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரன், கூட்டுறவு தொமுச செயலாளர் ஜெயராமன், தொமுச பொருளாளர் முருகன், அமைப்பு சாரா மாவட்ட செயலாளர் ஜெயராமன் நுகர் வாணிப கழக தலைவர் சங்கர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அரசு விரைவு போக்குவரத்துக்கழக தொமுச செயலாளர் சட்டநாதன் நன்றி கூறினார்.

Related Stories: