அண்ணா தொழிற்சங்க இணை செயலாளர் நியமனம்

வி.கே.புரம், நவ. 29: நெல்லை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணை செயலாளராக மகேஷ் பாண்டியன் நியமிக்கப்பட்டு உள்ளார். நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இசக்கி சுப்பையா எம்எல்ஏ பரிந்துரையின்படி வி.கே.புரத்தை சேர்ந்த மகேஷ் பாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக அண்ணா தொழிற்சங்க இணை செயலாளராக நியமனம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வி.கே.புரத்தில் உள்ள மதுரா கோட்ஸ் ஆலையில் பணிபுரிந்து வரும் மகேஷ் பாண்டியனுக்கு, நகர செயலாளர் கண்ணன், மாவட்ட கலை இலக்கிய அணிஅமைப்பாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட மகளிரணி செயலாளர் இமாகுலேட், அம்பை மேற்கு ஒன்றிய செயலாளர் பிராங்கிளின், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன் ஸ்டாலின் மற்றும் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: